Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்: மகள்களுக்கு போனி கபூர் கொடுத்த அட்வைஸ்

நடிகர் அஜித் உடன் பணியாற்றியவர்கள் அவரது எளிமையான கேரக்டர் பற்றி எப்போதும் பூரிப்புடன் பேசுவார்கள். அந்த அளவுக்கு அஜித் அனைவரிடமும் மரியாதையுடன் நடந்துகொள்வார்.

இது பற்றி நேர்கொண்ட பார்வை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அளித்துள்ள பேட்டியில் "அஜித் யாராக இருந்தாலும் அதிகம் மரியாதை கொடுப்பார். உடன் நடிப்பவர்கள் தொடங்கி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் லைட் பாய் வரை மரியாதை கொடுப்பார். ஆண், பெண், சீனியர்-ஜூனியர் என எந்த வித்தியாசமும் அவர் பார்ப்பதில்லை. இந்த தரம் என் மகள்கள் மட்டுமின்றி அனைவரும் கற்றுக்கொள்ளவேண்டும் என விரும்புகிறேன்," என போனி கபூர் கூறியுள்ளார்.

மேலும் ஸ்ரீதேவியின் இங்கிலிஷ் விங்கிலீஷ் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் அஜித் இலவசமாக நடித்து கொடுத்ததையும் போனி கபூர் நினைவு கூர்ந்துள்ளார். அதற்கான விமான டிக்கெட், ஹோட்டல் பில் ஆகியவற்றையும் அஜித்தே காட்டினார் என அவர் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.