Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெகா ஹிட் இயக்குனருடன் கைக்கோர்த்த சாய் பல்லவி, ரசிகர்கள் உற்சாகம்

சாய் பல்லவி எப்போதும் தேர்ந்தெடுத்து தான் ஒவ்வொரு படங்களிலும் நடித்து வருகின்றார். அந்த வகையில் இவர் தற்போது ராணா நடிக்கும் ஒரு படத்தில் நடிக்கின்றார்.

இதில் இவர் நக்ஸல்-ஆக நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது, இந்நிலையில் சாய் பல்லவி மேலும் ஒரு தெலுங்கு படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

இப்படத்தை Fidaa என்ற மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்த சேகர் தான் இயக்கவுள்ளார், இதில் ஹீரோவாக நாகசைதன்யா நடிக்கின்றார்.

சேகரின் Fidaa-விலும் சாய் பல்லவி தான் ஹீரோயின், அந்த படம் அவருக்கு மிகப்பெரும் திருப்பத்தை தெலுங்கில் தந்தது குறிப்பிடத்தக்கது.