Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஸ்ருதி ஹாசனுக்கு அடித்த ஜாக்பாட்.. உலக அளவில் பிரபலம் ஆக வாய்ப்பு

தமிழில் பல படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ருதி ஹாசன். கடைசியாக சிங்கம் 3 படத்தில் நடித்த அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இந்நிலையில் ஸ்ருதி தற்போது ஹாலிவுட் சீரிஸ் ஒன்றில் முக்கிய ரோலில் நடிக்க தேர்வாகியுள்ளார். உலகப்புகழ் பெற்ற Jason Bourne universeன் Treadstone சீரிஸில் தான் ஸ்ருதி நடிக்கிறார்.

டெல்லியில் ஒரு ஹோட்டலில் வேலை செய்துகொண்டே மற்ற நேரங்களில் கொலை செய்பவராக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். ஹங்கேரியின் Budapestல் நடக்கவுள்ள ஷூட்டிங்கில் அவர் விரைவில் கலந்துகொள்ளவுள்ளார்.