முகத்தில் கரியை பூசிவிட்டார்கள்.. நடிகர் சங்க தேர்தல் நடக்கும் இடத்தில் கொல்லங்குடி கருப்பாயி கண்ணீர்
நடிகர் சங்க தேர்தல் இன்று காலை முதல் நடந்து வருகிறது. சுமார் 3100 உறுப்பினர்கள் கொண்ட சங்கத்திற்கான தேர்தலில் நடிகர்கள் பலரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகை கொல்லங்குடி கருப்பாயிக்கு வாக்கு உரிமை இல்லை என கூறி அவரை திருப்பி அனுப்பிவிட்டனர். அதனால அவர் செய்தியாளர்கள் இடம் வந்து கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
நான் ரொம்ப தூரத்தில் இருந்து ஓட்டளிக்க வந்தேன்.. ஆனால், எனக்கு ஓட்டுரிமை இல்லை என்று சொன்னதும் என் முகத்தில் கரியை பூசியது போல் இருந்தது என அவர் கூறியுள்ளார்.