Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் டிவி அறந்தாங்கி நிஷாவுக்கு நடந்த விபத்து - மறைத்து வைத்திருந்த வீடியோ வெளியாகி வைரல்

விஜய் டிவியில் காமெடி ஷோகளில் பங்கேற்று வரும் அறந்தாங்கி நிஷாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு காமெடியில் பிரபலம் அவர். சமீபத்தில் அவர் ஒரு பிரபல அரசியல் கட்சி பற்றி பேசி சர்ச்சையில் சிக்கினார், அதற்காக மன்னிப்பு கேட்டும் வீடியோ வெளியிட்டார்.

இந்நிலையில் தற்போது நிஷாவின் மற்றொரு வீடியோ உலா வருகிறது. அந்த வீடியோவில் விஜே மணிமேகலை மற்றும் நிஷா இருவரும் கடற்கரை அருகில் நின்று நடனம் ஆடிக்கொண்டிருக்கின்றனர். அப்போது அருகில் இருக்கும் டேபிள் மீது ஏறி ஆடிய நிஷா கால் தவறி கீழே விழுந்துவிட்டார்.

யாருக்கும் தெரியக்கூடாது என்று நீண்ட நாட்களாக மறைத்து வைத்திருந்த வீடியோ என கூறி மணிமேகலை அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.