Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல சீரியல் நடிகை காணாமல் போன மர்மம்! சோகத்தில் மூழ்கிய பெற்றோர்கள் - நடந்தது என்ன

சீரியலில் நடிக்கும் பிரபலங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல ஆதரவும், ரசிகர்களின் அதீத அன்பும் கிடைத்து வருகிறது. சினிமாவுக்கு இணையாக சின்னத்திரையும் வளர்ந்து வருகிறது.

தெலுங்கு டிவி சீரியல்களில் நடித்து பிரபலமாக இருந்து வந்தவர் நடிகை லலிதா. ஹைதராபாத்தில் உள்ள எஸ்.ஆர்.நகரில் இருக்கும் விடுதியில் கடந்த ஒருவருட காலமாக தங்கி சீரியல்களில் பணியாற்றிவந்துள்ளார்.

அவரின் பெற்றோர் அனந்தபூர் என்னும் வேறொரு இடத்தில் வசித்து வருகின்றனர். கடந்த 17 ம் தேதி முதல் லலிதாவை போனில் தொடர்பு கொண்டுவந்துள்ளனர். ஆனால் பேசமுடியவில்லை.

இந்நிலையில் அண்மையில் தங்கியுள்ள விடுதிக்கு வந்து விசாரிக்கையில் அவர் இரண்டு மாதத்திற்கு முன்பே ஹாஸ்டலை விட்டு சென்றுவிட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியான பெற்றோர் தங்கள் மகள் லலிதாவை காணவில்லை என போலிசில் புகார் அளித்துள்ளனர். இதனால் நடிகைக்கு என்ன ஆனது, எங்கே போனார் என தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது.