Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டயானாவிலிருந்து நயன்தாரா மாறியது எப்படி? பெயர் வைத்தவரே கூறும் சுவாரஸ்ய தகவல்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக மட்டுமில்லாமல் நம்பர் ஒன் நடிகையாகவும் இருப்பவர் நயன்தாரா.

கோலிவுட்டிற்கு சரத்குமாரின் ஐயா படத்தின் மூலம் வந்தவர் மலையாளத்தில் தான் முதலில் அறிமுகமானார்.

அவர் அங்கு முதன்முதலில் நடித்த படம் மனசினக்கரே. இப்படத்தில் நடிக்க வந்தபோது படத்தின் இயக்குனர் சத்யனுக்கு நயன்தாராவின் நிஜ பெயரான டயானா மரியம் குரியன் பெயர் பிடிக்கவில்லையாம்.

பிறகு இந்த பெயரை மாற்ற படக்குழுவுடன் ஆலோசித்த போது நடிகை ஷீலா தான் டயானா என்ற பெயரை மாற்றி நயன்தாரா என வைத்துள்ளார்.

இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ள ஷீலா, தாரா என்றால் பெரிய நட்சத்திரம் என்றும் பெயரை போலவே நயன்தாரா மிக பெரிய நட்சத்திரமாக மாறிவிட்டார் எனவும் கூறியுள்ளார்.