Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜெர்சியை மாத்துங்க முதல்ல.. பிரபல நடிகை கோபத்துடன் பேசியது

இந்திய அணி நேற்று உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோதியது. அதில் இரண்டாவதாக பேட் செய்த இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் மட்டும் இந்தியா ஆரஞ்சு நிற ஜெர்சி அணிந்து விளையாடியது. அது பற்றிய மீம்கள் தான் சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகம் வைரல்.

இந்த புது ஜெர்சியால் தான் இந்தியா தோற்றுவிட்டது என ஒருபுறம் நெட்டிசன்கள் கலாய்த்து வரும் நிலையில், பிரபல நடிகை ஹுமா குரேஷி இதை மாற்ற வேண்டும் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

"மூட நம்பிக்கை எதுவும் இல்லை.. திரும்பவும் ப்ளூ ஜெர்சிக்கு மாறுங்க" என அவர் கூறியுள்ளார். இவர் காலா படத்தில் ரஜினியின் காதலியாக நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.