Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நான் விஷ் பண்றதுக்கு முன்னாடியே அஜித் விஷ் பண்ணிடுவாரு, விஜய்....! பிரபல சீரியல் நடிகை

வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிக் கடந்த 20 ஆண்டுகளாக சின்னத்திரையில் சிறந்த குணசித்திர நடிகையாக வலம் வருகிறார் கவிதா.

இவர் தனது சினிமா அனுபவங்களை பற்றி கூறுகையில், 7 வயதில் இருந்தே நடிக்க ஆரம்பித்துவிட்டேன். அஞ்சலி, தம்பிக்கு ஒரு பாட்டு, மனைவி வந்த நேரம், மாண்புமிகு மாணவன் போன்ற படங்களில் சின்ன பொண்ணாக நடித்திருப்பேன். அந்த படங்கள் பார்க்கும்போது இப்பவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

மாண்புமிகு மாணவன் படத்தில் நடிக்கும்போது எனக்கு 12 வயசு, விஜய்க்கு தங்கச்சியாக நடித்திருப்பேன். ரொம்ப அமைதி அவரு. அஜித்கூட வான்மதி, என் சுவாசக் காற்றே, முகவரி போன்ற படங்கள் பண்ணியிருக்கேன். அவர் ரொம்ப அடக்கமானவர். டவுன் டூ எர்த். நான் விஷ் பண்றதுக்கு முன்னாடியே அவர் விஷ் பண்ணிடுவாரு என கூறினார்.