Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

50, 60 ரூபாய்க்கே பைத்தியமாக அலைபவர்கள்- பட விழாவிலேயே பத்திரிக்கையாளர்களுடன் சண்டையிட்ட முன்னணி நடிகை

கங்கனா ரனாவத் நடித்த ஜட்ஜ்மென்டல் ஹை கியா? என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

அப்போது பத்திரிகையாளர்களிடம் கங்கனா உரையாடியபோது ஒருசில பத்திரிகைகள் தன்னுடைய மணிகர்னா படத்தை மோசமாக விமர்சனம் செய்ததாக குற்றஞ்சாட்டினார்.

இதனால் பத்திரிகையாளர்களுக்கும் கங்கனாவுக்கும் வாக்குவாதம் எழுந்தது. இதனையடுத்து இனிமேல் கங்கனா குறித்த செய்தியை புறக்கணிக்க போவதாக பொழுதுபோக்கு பத்திரிக்கையாளர்கள் சங்கம் அறிவித்தது.

இதன்பின்னர் ஜட்ஜ்மென்டல் ஹை கியா? படத்தின் தயாரிப்பு நிறுவனம் பத்திரிகையாளர்களிடம் வருத்தம் தெரிவித்தது. ஆனால் கங்கனா மன்னிப்போ வருத்தமோ தெரிவிக்க முடியாது என்று கூறிவிட்டார். அதுமட்டுமின்றி பத்திரிகையாளர்களை மோசமாக விமர்சனம் செய்தும் அவர் வீடியோ வெளியிட்டுள்ளதால் பாலிவுட் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.