Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை சூதாட்ட கிளப்பில் நடனம்! பறந்து சென்ற நடிகை நமீதா

2004-ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை நமீதா.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் மார்க்கெட்டை பிடித்த நமிதா விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், அஜித்துடன் பில்லா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட நமிதா, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

சமீபகாலமாக திரைப்படங்களில் தலைகாட்டாத இவர், தயாரிப்பாளர் வீரேந்திர சௌத்ரியை 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இலங்கை கொழும்புவில் உள்ள பிரபல காசினோவில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கிறார் நமீதா. இதற்காக இலங்கை சென்றிருக்கும் நமீதா அதற்கான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக நடிகை காஜல் அகர்வால் இந்த கேசினோவுக்கு சென்றிருந்தார். இங்கு அழைக்கப்படும் பிரபலங்களுக்கு மிகப்பெரிய தொகையை சம்பளமாக கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.