Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரே நடிகருடன் மீண்டும் மீண்டும் இணையும் நடிகை அதுல்யா ரவி! இவர் தான் காரணமோ

தமிழ் சினிமாவில் மிக மிக குறைந்த படங்களில் நடித்திருந்தாலும் மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருப்பவர் நடிகை அதுல்யா ரவி.

சசிக்குமாருடன் இவர் நடித்துள்ள நாடோடிகள்-2 படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திர சேகர் இயக்கத்தில் ஜெய்யுடனும் கேப்மாரி படத்தில் நடித்து வருகிறார்.

ஆனால் இப்படம் ரிலீஸாகும் முன்னரே அறிமுக இயக்குனர் வெற்றிசெல்வன் எஸ்.கே இயக்கும் மற்றொரு படத்திற்காக மீண்டும் ஜெய்யும் அதுல்யாரவியும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

ஜெய்யின் முன்னாள் காதலி நடிகை அஞ்சலி அதுல்யா ரவிக்கு நெருங்கிய தோழி என்பது கோலிவுட்டிற்கே தெரிந்த விஷயம். இப்படி ஜெய்யுடனே மீண்டும் அதுல்யா இணைந்ததற்கு அஞ்சலி தான் காரணமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.