Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புதுசா ஒன்னும் இல்லையே.. லீக் ஆன பிகில் பாடலை விமர்சித்த நடிகை

தளபதி விஜய் ரசிகர்கள் அனைவரும் பிகில் படத்தின் அப்டேட்காகத்தான் காத்திருக்கின்றனர். படம் தீபாவளிக்கு வருவதால் அப்டேட் ஒவ்வொன்றாக வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இன்று படத்தில் இருந்து 'சிங்கப்பெண்ணே' என்ற பாடல் கசிந்து இணையத்தில் வைரலானது. இது படக்குழு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த பாடல் பற்றி நடிகை கஸ்தூரி 'புதுசா எதுவும் இல்லை' என விமர்சித்துள்ளார். "லீக் ஆனா என்ன? ஏற்கனவே கேட்ட பாட்டுக்கள்தானே . புதுசா பிகில் சவுண்ட் மட்டும் சேர்த்துருக்கு. நல்லாத்தான் இருக்கு" என ட்விட் செய்துள்ளார் அவர்.