Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அமலாபால் ஆடையில்லாமல் பரிதாபமாக இருந்தார்- ஆடை இயக்குனரின் ஓபன்டாக்

நடிகை அமலாபால் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் ஆடை. மேயாத மான் இயக்குனர் ரத்னகுமார் இயக்கியுள்ள இப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.

ஒரு பெரிய அடுக்குமாடி கட்டடத்திற்குள் அமலா பால் நிர்வாணமாக அமர்ந்திருப்பது போன்றும், பயத்துடன் தப்பிப்பதற்கு வழி தேடுவது போன்றும் இருக்கும் இக்காட்சிகளின் படப்பிடிப்பின் போது அமலாபாலை சுற்றி 15 பேர் இருந்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன.

இந்த நிலையில் இணையதள சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த இயக்குனர் ரத்னகுமார், இந்த காட்சியில் அமலா பால் ஆடையில்லாமல் டிஷ்யூ பேப்பர்களை உடலில் சுற்றிக்கொண்டு நடிக்கவேண்டும் என்று கூறியதால். அமலா பால் உடல் முழுவதும் கேப் இல்லாமல் அட்டை பாக்ஸ் போன்று சுற்றிக்கொண்டு வந்தார். ஆனால் அந்த கதாபாத்திரத்திற்கு டிஷ்யூ பேப்பர்ஸ் கிடைக்காமல் கையில் கிடைத்ததை எடுத்து அரை மணி நேரத்தில் உடலில் சுற்றி நிர்வாண உடலை பதட்டத்தோடு மறைத்து கொண்டு ஓடி வர வேண்டும் என தெளிவாக மீண்டும் கூறிய பின்னர் அமலா பால் கூனி குறுகி ஒரு விதமான பயத்துடன் வந்ததை பார்த்து ரொம்ப பாவமாக இருந்தது என கூறியுள்ளார்.