Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கோவிலுக்கு சென்ற பிரபல சீரியல் நடிகை விபத்தில் பரிதாப மரணம்

கன்னட சீரியல்களில் நடித்து வந்தவர் சோபா. இவர் கடந்த ஜுலை 17ம் தேதி தனது 2 குழந்தைகள் மற்றும் 7 பேருடன் பனஷங்கரி கோவிலுக்கு காரில் சென்றிருக்கிறார்.

அப்போது அவர்கள் சித்ரதுர்கா அருகே சென்றபோது டிரக் மீது கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தில் சோபா உயிர் இழந்துள்ளார்.

அவருடன் காரில் சென்ற 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காரில் மீதமுள்ள 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போலீசார் இந்த விபத்தை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.