Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்பு இவரிடம் ப்ரொபோஸ் பண்ணாரா?: பிக்பாஸ் நடிகை முகத்திரையை கிழித்த தர்ஷனின் காதலி

பிக்பாஸ் நிகழ்ச்சி சர்ச்சைகளில் சிக்குவது ஒருபுறம் இருந்தாலும், அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் பல சர்ச்சைகளில் சிக்கியவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

அப்படி இந்த சீசனில் மீரா மிதுன் உள்ளார். அவரை மோசடி வழக்குகளில் போலீஸ் தேடிக்கொண்டிருக்கிறது. அதில் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

இந்நிலையில் மீரா மிதுன் பற்றி அதிர்ச்சிதரும் சில விஷயங்களை நடிகை சனம் ஷெட்டி தெரிவித்துள்ளார். சனம் தர்ஷனின் காதலி என்பது குறிப்பிடத்தக்கது.

மீரா ஒருமுறை பேசும்போது , "சிம்புவே என்னிடம் ப்ரொபோஸ் செய்தார். நான் தான் வேண்டாம் என கூறிவிட்டே ன்" என தெரிவித்தாராம் மீரா மிதுன்.

மற்றொரு முறை ஜீவா தன்னிடம் வந்து காதலை சொன்னதாக மீரா மிதுன் தெரிவித்தாராம். தற்போது பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் நிஜமாக இருப்பது மீரா மட்டும் தான். அவரது நிஜ குணமே அதுதான் என சனம் ஷெட்டி மேலும் தெரிவித்துள்ளார்.