Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் படத்தில் இந்த ஒரு விசயம் மாஸாக இருக்குமாம்! புல்லரிக்க வைக்கும் மொமண்ட்

விஜய்யின் 63 வது படமான பிகில் மீது ரசிகர்களுக்கும், ரசிகைகளுக்கும் எதிர்பார்ப்பு சூழ்ந்துள்ளது. இப்படத்தில் விஜய் ஃபுட்பால் கோச்சாக நடித்துள்ளார். இதற்காக பெரியளவில் கால்பந்து மைதானம் போல செட் போடப்பட்டு படமாக்கப்பட்டது. விஜய்யின் அணியில் 11 பெண்கள் இருக்கிறார்களாம்.

இதில் ஒருவர் காயத்திரி ரெட்டி. மாடலிங் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்த இவருக்கு இப்படம் தான் முதல் படமாம். அதுவும் விஜய்யுடன் நடித்துள்ளதால் படத்தின் ரிலீஸை காண மிகவும் ஆர்வமாக இருக்கிறாராம்.

அத்துடன் இப்படத்தில் அண்மையில் வந்த சிங்கபெண்ணே பாடலை தியேட்டரில் பார்க்கும் மாஸாக இருக்கும். இப்பாடல் தான் ஷூட்டிங் என தெரியாது. ஆனால் வழக்கம் போல தளத்திற்கு சென்றோம். ஷோபி மாஸ்டர் சொன்னது போல பாடலுக்கு ஆடினோம்.

அதன் பின்னர் பாடலின் பிளேக் பாக்கும் போது வேற லெவலில் இருந்தது என கூறியுள்ளது.