Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தலையில் அடிபட்டு 6 மாதம் நடந்ததை மறந்த முன்னணி ஹீரோயின் - ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல பாலிவுட் நடிகை திஷா பாட்னி பிட்னெஸ்சில் அதிக கவனம் செலுத்துபவர். ஜிம் ஒர்க்அவுட் மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் செய்யும் விடீயோக்களை அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அது ரசிகர்களை அதிகம் கவர்ந்தும் வருகிறது.

இந்நிலையில் திஷா பாட்னி அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் கான்கிரீட் தரையில் பயிற்சி மேற்கொள்ளும் போது ஒருமுறை தலையில் அடிபட்டு 6 மாதங்கள் நடந்த விஷயங்களை மறந்துவிட்டாராம்.

"ஆறு மாத வாழ்க்கையை நான் இழந்துவிட்டேன். எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லை" என அவர் கூறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.