Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திருமணம் நடந்தது, ஆனால்.. பிக்பாஸில் இருந்து வந்த மீரா மிதுன் சர்ச்சைக்கு சொன்ன பதில்

பிக்பாஸில் இந்த வரம் எலிமினேட் ஆனவர் மீரா மிதுன். அவர் இயக்குனர் சேரன் மீது சொன்ன பொய் புகார் காரணமாக அவர் கடைசி நாளில் ரசிகர்கள் ஓட்டில் பின்தங்கி, வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

வெளியில் வந்த பிறகு மீரா மிதுன் தன் மீது வந்துள்ள சர்ச்சைகள் பற்றி பேட்டி அளித்துள்ளார்.

"சேரன் கையும் களவுமாக மாட்டியபிறகு, நான் பேசியதற்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு விஷயத்தை எடுத்து ட்ராமா செய்துவிட்டார். அவர் கண்ணில் கண்ணீர் கூட வரவில்லை என கவின் சொன்னான்" என மீரா பேசியுள்ளார்.

மேலும் திருமணம் பற்றிய சர்ச்சைக்கு பதில் அளித்த அவர், "அது ஒரு சோசியல் மேரேஜ். ஒரு நாள் மட்டுமே நீடித்தது. அதை ரெஜிஸ்டர் கூட செய்யவில்லை. இந்திய சட்டப்படி எனக்கு இன்னும் முதல் திருமணம் நடக்கவில்லை" என குறிப்பிட்டுள்ளார்.