Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நயன்தாரா, அனுஷ்காவுக்கு போட்டியாக சமந்தா! சம்பளம் எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை போல தெலுங்கு சினிமாவில் நடிகை சமந்தாவை தற்போது பெண் சூப்பர் ஸ்டார் என கொண்டாடிவருகிறார்கள்.

காரணம் அவரின் நடிப்பில் அண்மையில் வெளியான ஓ பேபி படம் ரூ 40 கோடி வசூலை ஈட்டி வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஹீரோ இல்லாமல் நயன்தாரா, அனுஷ்கா போல சோலோ ஹீரோயினாக சாதித்துள்ளார்.

தற்போது படத்திற்கு ரூ 2 கோடி சம்பளம் வாங்கி வந்தார். தெலுங்கு சினிமாவில் நடிகைகளில் இது தான் அதிக சம்பளமாம். மேலும் ஓ பேபி படம் வெற்றியால் சமந்தா இன்னும் தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளாராம். இருந்தாலும் தயாரிப்பாளர்கள் அவர் கேட்ட தொகையை கொடுக்க தயாராக இருக்கிறார்களாம்.

ஏற்கனவே அனுஷ்கா, நயன்தாரா போல கதை சம்பளம் என போட்டியில் சமந்தா களமிறங்கியுள்ளார்