Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டியர் காம்ரேட் படத்தை பார்த்த முக்கிய கிரிக்கெட் பிரபலம்! சிறப்பு ஏற்பாடு

கடந்த வெள்ளிக்கிழமை விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நடிப்பில் டியர் காம்ரேட் படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. இருவரும் ஜோடியாக நடித்து வெளியான கடந்த இரண்டும் படங்களும் ஹிட் தான். தற்போது டியர் காம்ரேட் படம் நீளம் அதிகம் என்ற சிறு குறை மிகைப்படுத்தி சொல்லப்பட்டதால் படத்திலிருந்து 15 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டது.

நல்ல வசூல் செய்து வரும் நிலையில் படத்திற்கு வெற்றி விழாவும் கொண்டாடப்பட்டது. இப்படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்திருக்கும் ராஷ்மிகாவுக்கு கிரிக்கெட் மேலிடம் பாலியல் தொந்தரவு கொடுப்பது போல காட்சிகள் இருக்கும்.

இதனால் பெண்களின் திறமைகள் முடக்கப்பட்டு வளர்ச்சி பாதிப்பதால் சம்மந்தப்பட்ட பெண் தனக்கு நடக்கும் கொடுமையை தைரியமாக எதிர்த்து போராடி ஜெயிப்பதே கதை. இதனால் இப்படத்தை கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ்க்கு தனிகாட்சி போட்டுக்காட்டினார்களாம்.

அவர் படத்தை பார்த்துவிட்டு எல்லோரையும் பாராட்டினாராம்.