Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யாருக்கும் அத பேசஉரிமை கிடையாது! பொறுக்க முடியாமல் பொங்கியெழுந்த பிக்பாஸ் வனிதா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்டு 3 வாரம் வரை பிக்பாஸ் வீட்டில் இருந்தவர் வனிதா. ஓங்கி பேசுவது, அதிகாரத்தை எல்லோரிடமும் காட்டுவது, எல்லோர் விசயத்திலும் தலையிடுவது என இவரின் சில விசயங்கள் மக்களுக்கு பிடிக்கவில்லை.

அதனால் ஓட்டுகள் குறைவாக பெற்று இரண்டாவது நபராக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அந்நேரத்தில் அவரின் நடவடிக்கைகள் குறித்து மீம்கள் வெளியாகின.

அதில் அவரின் திருமண வாழ்க்கையை விமர்சிக்கும் வகையில் மீம்கள் இருந்தன. தற்போது இது குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதில் அவர் என் வாழ்க்கையில் இரண்டு விவாகரத்து நடந்தது உண்மை தான். நான் இதை யாரிடமும் மறைக்கவில்லை. வெட்கப்படவுமில்லை. என் வாழ்க்கை குறித்த சில மீம்களை கடந்தே வந்தேன்.

இது என் சொந்த விசயம். யாருக்கும் இது குறித்து பேச அதிகாரமில்லை. நாம் வாழும் போது விவாகரத்தும் நடக்கும். அது ஜோடிகளுக்கேற்ற வாரு காரணங்கள் மாறும்.

எல்லோருக்கும் துணை தேவைப்படுகிறது. நீங்களை யாரிடம் எல்லா விசயங்களை பகிர்ந்து கொள்கிறீர்களோ அந்த முக்கிய நபருடன் கடைசி வரை வாழ்க்கையை கொண்டு செல்வது கடினம்.

சிலர் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்களை கூட துணையாக ஏற்கிறார்கள். இது எல்லாமே இணக்கத்தன்மையையும் அவர் இருவரும் எப்படி இணைந்திருக்கிறார்கள் என்பதை பொறுத்தது. துணை என்பதற்காக எப்போதும் உடலுறவு கொள்ள தேவையில்லை. ஒருவரை ஒருவர் தாழ்த்த முயற்சி செய்வது, விவாகரத்தில் நியாமற்றது என கூறியுள்ளார்.