Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்பும் தனது அட்ராசிட்டியை காட்டும் மீரா மிதுன்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய மீரா, பிக்பாஸில் இருந்து தான் வெளியேற காரணமாக இருந்த சேரன் மீது தனது குற்றச்சாட்டுகளை பல பேட்டிகளில் கூறி வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், சேரன் அழுதபோது அவரது கண்களில் இருந்து கண்ணீரே வரவில்லை. பிக்பாஸ் வீட்டை விட்டு தன்னை வெளியேற்றியே ஆக வேண்டும் என சேரன் கூறியதாக கவீன் என்னிடம் தனியாக சொன்னார் என கூறியுள்ளார்.

முக்கோண காதல் விஷயத்தில் தற்போது சிக்கி தவித்து வரும் கவீன், மீரா- சேரன் பிரச்சனையின் போது சேரனுக்கே தனது ஆதரவை தெரிவித்திருந்தார். ஆனால் மீரா கூறுவது முற்றிலும் வேறு விதமாக உள்ளது.

பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்த பின்பும் மீரா பொய்கள் கூறுவதை நிறுத்தவில்லையா? என நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர்.