Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஓவியாவுக்கும், மீரா மிதுனுக்கும் இப்படியொரு ஒற்றுமையா? வைரலாகும் புகைப்படங்கள்

பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட ஓவியாவுக்கு மிக பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டானது. ஓவியா ஆர்மியை தொடங்கிய அவர் ரசிகர்கள் சமூகவலைதளத்தில் கொண்டாடி தீர்த்தார்கள்.

இந்நிலையில் பிக்பாஸ் நடப்பு சீசனில் கலந்து கொண்ட மீரா மிதுன் ரசிகர்கள் ஈர்ப்பதற்கு பதிலாக அவர்களின் வெறுப்பை சம்பாதித்தார். முக்கியமாக சேரன் தன்னை தவறாக தொட்டார் என அவர் கூறியது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

இதன் எதிரொலியாக அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் மாறுபட்ட குணாதிசயங்களை கொண்ட இருவருக்கும் சில ஒற்றுமைகளும் உள்ளது.

இருவரும் நவீன பேஷனை விரும்புகிறவர்கள், அதே போல இருவரும் தங்களது வலது கையின் தோள்பட்டையில் டாட்டூ குத்தியுள்ளனர். இது தொடர்பிலான புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளது.