Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இரண்டு முன்னணி ஹீரோயின்களை வைத்து வெப் சீரிஸ் எடுக்கும் வெங்கட்பிரபு, யார் தெரியுமா?

வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் சென்னை-28, சரோஜா, மங்காத்தா என ஹிட் படங்களை கொடுத்தவர். இவர் இயக்கத்தில் விரைவில் பார்ட்டி படம் திரைக்கு வரவுள்ளது.

இதை தொடர்ந்து இவர் மாநாடு படத்தின் படப்பிடிப்பிற்கு தயாராகி வந்தார், ஆனால், மாநாடு குறித்து தற்போது வரை எந்த ஒரு தகவலும் வரவில்லை.

அதே நேரத்தில் வெங்கட் பிரபு வெப் சீரிஸ் ஒன்றை எடுக்கவுள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளது, அதில் வைபவ் ஹீரோவாக நடிக்கின்றார் என்றும் கூறப்படுகின்றது.

அதில் காஜல் அகர்வால், கயல் ஆனந்தி ஆகியோரும் முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது.