Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் சரவணனுக்காக பொங்கிய ரசிகர்கள்! மற்ற போட்டியாளர்கள் செய்த லீலைகளை வறுத்தெடுத்த ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது 45 நாளை எட்டிவிட்டது. கடந்த வாரம் ரேஷ்மா வெளியேற்றப்பட்டார். இத்துடன் 16 போட்டியாளர்களில் 5 பேர் வெளியேறிவிட்டனர்.

இது ஒரு பக்கம் இருக்க சரவணனுக்கு ஆரம்பம் முதலே நல்ல ஆதரவு இருந்து வந்தது. அவர் தன் குடும்ப கதையை சொன்னபோது அனைவரும் உருகிவிட்டார்கள்.

அண்மையில் அவர் பேருந்தில் பயணம் செய்த போது பெண்களை உரசினேன் என கூறியது பெரும் சர்ச்சையாகி பின் அவர் மன்னிப்பு கேட்டார். அத்துடன் அவர் சேரனை மரியாதை குறைவாக பேசியதும் சர்ச்சையாகி அதற்கும் மன்னிப்பு கேட்டார்.

இந்நிலையில் அவர் வெளியேற்றப்பட்டதாக வந்த புரமோ ரசிகர்களுக்கு அதிர்ச்சி. உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் சாண்டி, மதுமிதா, கவின், ஆகியோர் மிகவும் அழுகிறார்.

புரமோவை பார்த்த ரசிகர்கள் சமூகவலைதளத்தில் காதல் என்ற பெயர் கவின் செய்ததை மன்னித்து உள்ளே வைத்துக்கொண்டீர்கள், எப்பவோ சரவணன் செய்ததற்கு மன்னிப்பு கேட்ட பின்பும் அவரை வெளியேற்றிவிட்டீர்கள் கவின் உங்களுக்கு வேண்டிய நபர் என்பதால் தானே என சானல் மீது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் சரவணனுக்கு ஆதரவுகள் இருந்தாலும் பெண்கள் ஆதரவு அவருக்கு வேண்டும் என பலரும் கூறிவருகிறார்கள். யாருக்கு தெரியும் அவரை சீக்ரட் ரூமில் வைக்கப்பட்டிருக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்....