நடிகை மீனா அஜித், விஜய், ரஜினி என பலருடன் நடித்து 90 களில் டாப் ஹீரோயினாக இருந்தவர். உச்சத்தில் இருந்த அவரை கண்ணழகி என அடைமொழியிட்டு ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
திருமணம், கையில் பேபி நைனிகா என்ற குழந்தை என குடும்ப வாழ்க்கையில் கமிட்டானார். சினிமாவிற்கு ஓய்வு கொடுத்திருந்தார். அவரின் மகள் நைனிகாவை விஜய் நடித்த தெறி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். தற்போது டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக மீனா பங்கேற்று வருகிறார்.
மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வரும் அவர் தற்போது தமிழிலும் களமிறங்கியுள்ளார். அருண்விஜய் நடிக்கும் பாக்ஸர் படத்தின் இயக்குனர் விவேக் எடுக்கும் கரோலின் காமாட்சி என்ற வெப் தொடரில் நடிக்கிறாராம்.