Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் இளைஞருடன் கட்டிப்பிடித்து நடனம்- பிக்பாஸ் மீரா மிதுனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

பிக்பாஸில் இருந்து கடந்த வாரத்திற்கு முன்வாரம் வெளியேற்றப்பட்டவர் மீரா மிதுன். மாடலிங் துறையை சேர்ந்த இவர் மிஸ் தென்னிந்தியா பட்டத்தையும் பெற்று பின்பு பறிக்கொடுத்தவர்.

இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு முக்கிய காரணம் சேரன் மீது பொய்யான பாலியல் குற்றச்சாட்டை கூறியது தான். மீராவின் இந்த செயலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சில மாதங்களுக்கு முன் இளைஞர் ஒருவருடன் அவர் நடனமாடும் வீடியோவை நெட்டிசன்ஸ் இணையத்தில் பரவவிட்டனர்.

தற்போது பிக்பாஸில் இருந்து வெளியே வந்துவிட்ட மீரா மீண்டும் இளைஞருடன் கட்டிப்பிடித்து நடனமாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 35 நாட்களுக்கு பிறகு மீண்டும் தான் தவறவிட்ட வாழ்க்கை கிடைத்திருப்பதாக குறிப்பிட்டு வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்ஸ் சேரன் விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப, அதற்கு மீரா மிதுனோ, இது லத்தீன் நடனம். இந்த நடனத்தில் ஒரு ஆண் என்னை தொடுவதால் என்னை அனைத்து ஆண்களும் தொடலாம் என்றில்லை.

சேரன் என்னிடம் வன்முறையாக நடந்து கொண்டார். அதனால் தான் நான் என்னை யாரும் இப்படி தொட்டதில்லை என்று கூறினேன். உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.