நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவபர். இவர் நடிப்பில் சமீபத்தில் கொலையுதிர் காலம் படம் திரைக்கு வந்தது.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக மோசமான விமர்சனத்தை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு இன்று ஒரு விளம்பரம் வந்துள்ளது.
இதில் நடிகையர் திலகம் சாவித்ரியை மிஞ்சும் நடிப்பு என்று விளம்பரம் கொடுத்துள்ளனர்.
சமீபத்தில் நடிகையர் திலகம் படத்திற்காக கீர்த்திக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதை வைத்து டுவிட்ட்டரில் சண்டைப்போட்டு வருகின்றனர் ரசிகர்கள்.