Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Cineulagam Exclusive: ஏ.ஆர்.முருகதாஸின் கதையில் த்ரிஷா நடிக்கும் படத்தின் அடுத்தக்கட்ட அதிரடி

பேட்ட படத்திற்கு அடுத்ததாக பல படங்களின் படப்பிடிப்புகளில் பிசியாக நடித்து வருகிறார், த்ரிஷா.

அதில் ஒரு படம் ராங்கி. எங்கேயும் எப்போதும் இயக்குனர் எம்.சரவணன் இயக்கிவரும் இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் 15ஆம் தேதியிலிருந்து உஸ்பெகிஸ்தானில் ஆரம்பமாகவுள்ளது.

இதற்காக த்ரிஷா உள்பட ராங்கி படக்குழு அடுத்த மாதம் 10ஆம் தேதியில் உஸ்பெகிஸ்தானிற்கு புறப்படவுள்ளனர். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்திற்காக கதை மற்றும் வசனம் எழுதவுள்ளார். மேலும் உஸ்பெகிஸ்தானில் உள்ளவர்களே இப்படத்தில் பெரும்பான்மையாக நடிக்கவுள்ளனராம்.