Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புற்றுநோய் சிகிச்சைகாக வைத்திருந்த பணத்தை மக்களுக்கு தானமாக கொடுத்த சீரியல், சினிமா நடிகை!

சினிமா பிரபலங்களுக்கென்ன ஜாலியான வாழ்க்கை, காசு பணம் கூரையை பிய்த்துகொண்டு கொட்டும் என நம்மில் சிலர் வாய் ஜாலங்கள் பேசியிருப்போம்.

ஆனால் அவர்களுக்கும் நம்மை போல பிரச்சனைகள், பொருளாதார சிக்கல் என இருக்கும். அதிலும் உதவி செய்கிறார்கள் என்றால் ஆச்சர்யமே.

கேரளாவை சேர்ந்த பிரபல சீரியல் நடிகை சரண்யா கடந்த சில மாதங்களாக புற்று நோயால் அவதிப்பட்டு வருகிறார். அறுவை சிகிச்சைக்கும் தயாராகிவிட்டார்.

இந்நிலையில் கேரளாவில் அண்மையில் வந்த வெள்ளத்தால் மக்கள் பலரும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளார். சினிமா பிரபலங்கள் பலரும் அவர்களுக்கு பணம், பொருள் என உதவி வரும் நேரத்தில் சரண்யா தன்னுடைய அறுவை சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தில் சில குறிப்பிட்ட தொகையை அவர்களுக்கு வழங்கியுள்ளார்.

அதே வேளையில் அவர் தற்போது 7 வது முறையாக அறுவைசிகிச்சை செய்துள்ளாராம்.