Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விபச்சாரி என்பது போல பேசுகிறார்கள்.. ரஜினியிடம் உதவி கேட்ட நடிகை விஜயலக்ஷ்மி உருக்கமாக பேசிய வீடியோ

பிரெண்ட்ஸ் பட நடிகை விஜயலக்ஷ்மி தான் கடும் கஷ்டத்தில் இருப்பதாக கூறி நடிகர் ரஜினிகாந்திடம் உதவி கேட்டார். அதை பார்த்து நடிகர் ரஜினியும் அவரை போனில் தொடர்பு கொண்டு உதவி செய்தார்.

இந்நிலையில் இது பற்றி சிலர் தன்னை மோசமான பெண் என்பது போல விமர்சித்து வருவதை கண்டித்து நடிகை புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தன்னை மோசமான பெண், விபச்சாரி என்பது போல மோசமாக எழுதுகிறார்கள்.

"நான் ரஜினி சாரிடம் உதவி கேட்டேன். அதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. கமல் சாரிடமும் உதவி கேட்பேன். நான் ஹார்ட் பிரச்சனையுடன் வாழ்ந்து வருகிறேன். இன்னும் சில மாதங்கள் தான்.. என்னை நிம்மதியாக வாழ விடுங்கள். என்னை தொடர்ந்து இப்படி சொன்னால் முன்பு சொன்னது போலவே, யாரெல்லாம் காரணமோ அதை எழுதி வைத்துவிட்டு நான் 2 நிமிடத்தில் சென்றுவிடுவேன். பின்னர் கஷ்டப்படப்போவது நீங்கள் தான்" என விஜயலக்ஷ்மி கூறியுள்ளார்.

என்னை பற்றி தவறாக எழுத வேண்டாம் என கூறுங்கள் என சீமானை அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ட்விட்டரில் பரவி வரும் வீடியோ இதோ..