Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் சாரை சைட் அடிச்சு அவரிடமே மாட்டிகிட்டேன்.. பிரபல நடிகை ஒபன் டாக்

நடிகர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படம்ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ள அபிராமி வெங்கடாச்சலம் தற்போது தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்துள்ளார்.

தற்போது இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி பேட்டி கொடுத்துள்ளார் அபிராமி. ஷூட்டிங் துவங்கும் முன்பே அஜித் அவர்களை அழைத்து டின்னர் கொடுத்தாராம். அது அவருடன் பயப்படாமல் நடிக்க உதவியது என கூறியுள்ளார் அபிராமி.

மேலும் அஜித் சாரை ஷூட்டிங் ஸ்பாட்டில் சைட் அடித்தேன் என கூறியுள்ள அவர், ஒருமுறை அஜித்திடம் மாட்டிக்கொணடாராம். அவரை பார்த்துகொண்டிருப்பதை பார்த்து அஜித் கொஞ்சம் சிரித்துவிட்டு சென்றுவிட்டாராம்.