Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பெரும் ஆபத்தில் மாட்டிக்கொண்ட பிரபல நடிகை! அசுரன் பட ஹீரோயின் என்ன ஆனார்

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் நடித்திருப்பவர் மஞ்சுவாரியார். மலையாள சினிமாவின் பிரபல நடிகையான இவர் கைட்டம் என்னும் மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

சனல் சசிதரன் இயக்கும் இப்படத்திற்காக அவரும் 30 பேரும் ஹிமாச்சலுக்கு சென்றுள்ளனர். கடந்த இரண்டு வாரங்களாக அவர்கள் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.

அண்மையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் படக்குழுவும் சிக்கியுள்ளது. கடந்த திங்கள்கிழமை மாலை அவர் தனது சகோதரர் மதுவுடன் போன் மூலம் பேசிய பிறகு தான் உண்மை தெரியவந்துள்ளது.

இது குறித்து அவரின் சகோதரர் மஞ்சு தற்போது சட்ரு என்ற கிராமத்தில் இருப்பதாகவும், அங்கு தொலை தொடர்பு செயல் இழந்துள்ளது. மிக மிக குறைவான நேரமே மஞ்சு போனில் பேசினால். இன்னும் சிலர் சிக்கியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் கேரள வெளியுறவுத்துறை அமைச்சர் முரளீ தரண் மூலமாக ஹிமாச்சல் முதல்வர் ஜெய் ராம் தாக்கூருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். பின் அவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.