Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நிச்சயம் அரசியலுக்கு வருவேன்... அதிரடியாக அறிவித்த முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தாலே பெரிய அளவில் பாப்புலர் ஆகிவிடுகின்றனர். அதை பயன்படுத்தி போட்டியாளர்கள் பலருக்கும் சினிமாவில் புதிய வாய்ப்புகளும் கிடைக்கிறது.

அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு தற்போது பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார் யாஷிகா ஆனந்த். அவர் நடித்துள்ள ஸாம்பி படம் விரைவில் திரைக்கு வருகிறது.

இந்நிலையில் தற்போது அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தான் நிச்சயம் வரும்காலத்தில் அரசியலுக்கு வருவேன் என கூறியுள்ளார்.

சினிமாத்துறையில் ஜொலித்த பல நடிகைகள் அரசியலிலும் ஜெயித்துள்ளனர். ஜெ.ஜெயலலிதா, ரோஜா, குஷ்பு என பெரிய பட்டியலே உள்ளது. அதில் விரைவில் யாஷிகா ஆனந்தும் இணைவார் என எதிர்பார்களாம்.