Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சாய் பல்லவி போடும் கண்டிஷன்.. தெலுங்கு சினிமா இயக்குனர்கள் அதிர்ச்சி

சாய் பல்லவி தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் அதிகம் இருந்தாலும் அவரது சமீபத்திய படங்கள் பலவும் பெரிய அளவில் ஓடவில்லை.

தியா, என்ஜிகே, Padi Padi Leche Manasu என பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

இந்நிலையில் தற்போது தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களுக்கு அதிர்ச்சி தரும் விதத்தில் பல கண்டிஷன்கள் போடுகிறாராம் அவர். தன்னுடைய ரோலுக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிப்பேன் என கூறுகிறாராம். அதற்காகவே பல பெரிய தெலுங்கு படங்களையும் நிராகரித்துள்ளாராம்.

பெரும்பாலும் ஹீரோகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களே அதிகம் என்பதால், அவற்றை சாய் பல்லவி நிராகரித்தால் விரைவில் அவரது மார்க்கெட் குறைந்துவிடும் என பலரும் கருத்துதெரிவிக்கின்றனர்.