Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி பற்றி ட்வீட்.. குஷ்புவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

நடிகை குஷ்பு எப்போதும் ட்விட்டரில் ஆக்ட்டிவாக இருப்பவர். அவர் எப்போதும் அரசியல் உட்பட எதாவது ஒரு விஷயம் பற்றி தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்கிறார்.

தற்போது அவர் ட்விட்டரில் தான் லண்டனில் ஷாப்பிங் செய்தபோது ரஜினிகாந்த் புகைப்படத்துடன் கூடிய மொபைல் கவர்களை பார்த்ததாக புகைப்படம் வெளியிட்டிருந்தார்.

ஆனால் அது உண்மையில் ரஜினி இல்லை Emir of Qatar தமீம் பின் ஹமாத் என்பவரின் புகைப்படம். இது பற்றி ட்விட்டரில் குஷ்புவை பலரும் விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர்.

அவரும் தன்னுடைய தவறை உணர்ந்து வேறொரு ட்விட்டில் விளக்கம் தெரிவித்துள்ளார்.