Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சீரியல் நடிகைக்கு சேர்ந்த சோகம்! கொடூரமாக அடித்த இரண்டு பேர் - விசாரணையில் வந்த திடுக்கிடும் தகவல்

சினிமாவுக்கு இணையாக சின்னத்திரைக்கும் நல்ல வரவேற்பு மக்கள் மத்தியில் இருக்கிறது. இதில் நாம் சரண் என்ற தொலைக்காட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை நளினி நேகி.

மும்பை ஒஷிவாராவில் தன்னுடைய தோழி பீர்த்தியும் அவரின் அம்மா சினேகலதாவும் கடுமையாக தாக்கியுள்ளனர், அவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

விசாரணையில் நளினி, பிரீத்தியுடன் சேர்ந்து அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தேன். பின்னர் பெரிய வீடு பார்த்து நான் தனியே சென்றுவிட்டேன்.

பின்னர் நான் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டு பிரீத்தி என் வீட்டில் சில நாட்கள் தங்குவதாக கேட்டார். தோழிக்கு உதவி செய்யலாமே என நானும் ஓகே சொல்லிவிட்டேன்.

பின்னர் பீர்த்தி தன் அம்மா சினேகலதாவும் தங்க வேண்டும் வேறு வீடு பார்த்து செல்லும் வரை என கூறினார் அதற்கும் ஓகே என கூறினேன்.

ஆனால் கிளம்புவதாக தெரியவில்லை. இதனால் பீர்த்தியிடம் சீக்கிரம் வீடு பார்த்து கிளம்பும் படி கூறினேன். அதை அவர் தன் அம்மாவிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் அண்மையில் நான் நண்பருடன் ஜிம்மிற்கு போவதற்கு கிளம்பும் போது என்னிடம் வந்து சினேகலதா வாக்குவாதம் செய்தார்.

பீர்த்தியிடம் நான் இதை சொல்ல அவளும் என்னிடம் தகராறு செய்தாள். அப்போது அவரின் அம்மா கண்ணாடியால் என் முகத்தில் அடித்தார். பிரீத்தியும் என்னை அடித்தார் என நளினி கூறியுள்ளார்.