Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நோ மீன்ஸ் நோ.. நடிகையாக சொந்த வாழ்க்கையில் படும் கஷ்டத்தை கூறிய டாப்ஸி

பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவர் நடிகை டாப்ஸி. அவர் நடித்திருந்த பிங்க் படத்தை தான் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தமிழில் படமாக்கி இருந்தார்கள்.

இந்நிலையில் நடிகையாக சொந்த வாழ்க்கையில் பல இன்னல்களை சந்திப்பதாக டாப்ஸி கூறியுள்ளார். பிரபலம் என்பதால் நான் பிறந்து வளர்ந்த டெல்லியில் கூட என்னால் பொது இடங்களுக்கு செல்ல முடியவில்லை. அப்படி சென்றால் எனக்கு மட்டுமின்றி என் உடன் வருபவர்களுக்கும் தொல்லை கொடுக்கிறாரகள். நோ மீன்ஸ் நோ.. என்பதை இன்னும் மக்கள் புரிந்துகொள்ளவே இல்லை.

அதனால் நான் ஷாப்பிங் செய்வது என்றால் வெளிநாட்டில் மட்டும் தான் செய்கிறேன். எனக்கு மால்களுக்கு சென்று ஷாப்பிங் செய்வது தான் பிடிக்கும். ஆனால் இந்தியாவில் இனி அப்படி நான் செய்ய முடியாது.

மக்களுக்கு என்னை அதிகம் பிடிக்கிறது என்பது சந்தோசமாக விஷயம் தான். ஆனால் மெல்லிய கோட்டை கடந்தால் என் சொந்த வாழ்க்கையில் குறுக்கீடுகள் அதிகம் வருகிறது. என் குடும்பத்தினர் பாதிக்கப்படுவது தான் எனக்கு கவலையாக இருக்கிறது.

சினிமாவில் பிரபலம் ஆன பிறகு வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது என்றும் கூறியுள்ளார் டாப்ஸி.