Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

5 வருடத்திற்கு முன்பு அஜித் தன்னிடம் பேசியதை வீடியோ பதிவு செய்து தற்போது வெளியிட்ட நடிகை

நடிகர் அஜித்திற்கு ரசிகர்கள் ஏராளம். அவருடன் நடிக்கவேண்டும் என பல பிரபல நடிகர் நடிகைகள் பேசி கேட்டிருப்போம். அவரை ஒருமுறை பார்த்து பேசினாலே போதும் எனவும் சில பிரபலங்கள் கூறியும் பார்த்திருப்போம்.

அப்படி ஐந்து வருடங்களுக்கு முன்பு அஜித்தை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது பற்றி தற்போது நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார் நடிகை அலிஷா அப்துல்லா.

அஜித்திற்கு பைக் ரேஸ் என்றால் அதிகம் பிடிக்கும். அப்படி ஐந்து வருடங்களுக்கு முன்பு அஜித் பைக் ரேஸரும் நடிகையுமான அலிஷா அப்துல்லாவின் சூப்பர்பைக்கை வாங்கி ஓட்டிபார்த்துள்ளார்.

"All the best. Do well. Be safe" என அஜித் பைக்கில் அமர்ந்துகொண்டு இவரிடம் பேசியுள்ளார். அதை அலிஷா வீடியோ பதிவு செய்து தற்போது வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இதோ..