Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் டிவி இப்போவும் என்னைபேசவிடல.. மீண்டும் குற்றம்சாட்டிய பிரபல நடிகை

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு வழியாக இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. வழக்கம் போல பல சர்ச்சைகளில் சிக்கியது இந்த நிகழ்ச்சி.

பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயே நடிகை மதுமிதா தன்னுடைய கையை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சி செய்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. அது போல பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டுஎண்ட்ரியாக வீட்டுக்குள் சென்ற நடிகை கஸ்தூரி சரியாக பேசவில்லை என்கிற விமர்சனமும் எழுந்தது.

இது பற்றி கஸ்தூரி ட்விட்டரில் தற்போது பேசியுள்ளார். விஜய்யின் பிகில் ஆடியோ லான்ச் பேச்சு பற்றி கஸ்தூரி ட்விட் போட்ட நிலையில் அதற்கு பதில் அளித்த ரசிகர் ஒருவர், 'இதை ஏன் பிக்பாஸில் பேசவில்லை?' என கேட்டார். அதற்கு பதில் அளித்த அவர், "நான் பேசினேன். ஏன் காட்டவில்லை என விஜய் டீவியிடம் கேட்கவேண்டும். என்னை இப்போதும் பேச விடல" என கூறியுள்ளார்.