Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நூலிழையில் உயிர் தப்பிய நாகினி சீரியல் நடிகை மௌனி ராய் - அதிர்ச்சி சம்பவம்

நாகினி என்ற ஒரே சீரியல் மூலமாக இந்தியா முழுவதும் அதிகம் பாப்புலர் ஆனவர் நடிகை மௌனி ராய்.

இவர் அதன்பிறகு சீரியல்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு தற்போது சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பு அவர் நடித்துள்ள Made in China படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக காரில் ஏறி கிளம்பியுள்ளார் அவர். மும்பையில் ஜூஹூ சிக்னல் அருகில் மெட்ரோ பணிகள் நடக்கும் இடத்தில் கார் வந்தபோது ஒரு பெரிய உயரத்தில் இருந்து காரின் மீது விழுந்துள்ளது.

அதிர்ஷ்டவசமாக மௌனி ராய் உயிர் தப்பினார். இந்த சம்பவம் பற்றி வீடியோ வெளியிட்டு மும்பை மெட்ரோ பற்றி கோபமாக பேசியுள்ளார் அவர்.