Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

90ஸ் கிட்ஸ் பேவரட் மீனா போட்ட கடும் கண்டிஷன்!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல முன்னனி நட்சத்திரங்களுடன் நடித்து தமிழ் சினிமாவை கலக்கியவர் நடிகை மீனா. அவரை கண்ணழகி என்று கொண்டாடுவார்கள்.

முதலில் அந்த பட்டத்திற்கு வெக்கப்பட்டாலும் பின்பு அந்த பட்டத்தை அவர் ஏற்று கொண்டார். மீனா சின்னத்திரையிலும் கலக்கி வந்தார்.

அந்த வகையில் மீனா புதிதாக வெப் சீரிஸ் ஒன்றில் கமிட் ஆகி நடித்துள்ளார். 'கரோலின் காமாட்சி'என்று அவர் நடித்த வெப் சீரிஸ் சீக்கிரம் வெளியாக தயார்நிலையில் உள்ளது.

சினிமா சீரியலில் வெறும் மீனா என்று டைட்டில் கார்டு போட்ட நிலையில் 'கரோலின் காமாட்சி' போஸ்டரில் எவெர்க்ரீன் ஸ்டார் மீனா என்று போட்டுள்ளனர்.

முதலில் இதற்கும் ஒத்துக்கொள்ளாமல் டைட்டில் கேட்ட உடனே சிரித்த மீனா பின்னர் ஒத்துக்கொண்டு போஸ்டர் போடுவதோடு நிறுத்திகொள்ளுங்கள். பேனர் வைத்து சர்ச்சையில் மாட்டிக்கொள்ளாதீர்கள் என்று கூறி இருக்கிறார்