Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகைக்கு நேர்ந்த மரண சம்பவம்! ரசிகர்கள் சோகம் - பிக்பாஸ் காஜல் போட்ட பதிவு

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் தவிர்க்க முடியாதவர்களாய் தங்களுக்கென தன் இடம் பிடித்து வைத்திருந்தார்கள். அதில் ஒருவர் நடிகை சில்க் சுமிதா.

விஜயலெட்சுமி என்ற பெயரோடு தெலுங்கு தேசத்தில் இருந்து இங்கு வந்தவரை சினிமாவில் சில்க் சுமிதா என அறிமுகப்படுத்தியவர் நடிகர் வினுசக்ரவர்த்தி.

திறமையான நடிகையான இவர் ஹீரோயினாக வரவேண்டும் என கனவோடு இருந்தவர். ஆனால் இவரை கடைசி வரை கவர்ச்சி நடிகையாகவே காட்டிவிட்டார்கள்.

தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் 100 க்கும் அதிகமான படங்களில் நடித்திருந்தார். மிக குறுகிய நட்பு வட்டாரத்தை கொண்டவர். கொஞ்சம் கோபப்பட்டாலும் மனதளவில் குழந்தை போன்றவராம்.

வாழ்க்கையில் பலரால் ஏமாற்றம், விரயம் படத்தயாரிப்பால் நஷ்டம், என மன உளைச்சலுக்கு ஆளானவர் கடைசியாக செப்டம்பர் 23, 1996 ல் டேன்சர் அனுராதாவிடம் பேசுவதற்காக போனில் அழைத்திருக்கிறார். அவரும் குழந்தையை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு வருகிறேன் என கூறியின் பின் சில நிமடங்களில் ஸ்மிதா இறந்ததாக செய்தி வெளியானது.

அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் இறந்தது 23 வருடங்கள் ஆகிவிட்டது.

இதனை வருத்ததுடன் பதிவிட்டுள்ளார் பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர் காஜல்.

loading...