Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரசிகைகள் மத்தியில் மாஸ் காட்டிய துருவ்! பேசி பாடி அசத்திய ஹீரோ - விசல் சத்தம் பறக்கும் வீடியோ

சியான் விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாகும் படம் ஆதித்ய வர்மா. இப்படத்தை எதிர்பார்த்து இள ரசிகர்கள், ரசிகைகள் வட்டாரம் காத்திருக்கிறது. மகனுக்கு சினிமாவில் ஒரு வழியை அமைத்துக்கொடுத்திட வேண்டும் என கவனத்துடன் ஒரு அப்பாவாக விக்ரம் செயல்பட்டு வருகிறார்.

தெலுங்கு அர்ஜூன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மா படத்தின் டீசர், பாடல் அண்மையில் வெளியாகி லட்சக்கணக்கான பார்வைகளை அள்ளியது.

பட ரிலீஸ்க்காக காத்திருக்கும் நேரத்தில் துருவ் கோவையில் உள்ள கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்டு அப்பா போல சாமி படத்தின் டையலாக் பேசியும், சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படத்தின் உன் விழிகளில் பாடலை பாடி அசத்த ரசிகர், ரசிகைகளிடையே விசில் சத்தம் பறந்தது.