Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படம் முடியும் வரை மட்டும் அப்படி.. தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் மீது பிரபல நடிகை Casting Couch புகார்

சினிமா துறை என்றாலே நடிகைகளுக்கு அதிகம் பாலியல் தொல்லைகள் வருகிறது என பல நடிகைகள் வெளிப்படையாக புகார் கூறி வருகின்றனர். மீ டு புகாரில் பல முன்னணி சினிமா துறை பிரபலங்கள் சிக்கியதும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில் பிரபல ஹிந்தி நடிகை சுர்வீன் சாவ்லா அளித்துள்ள பேட்டி ஒன்றில் தேசிய விருது வென்ற தமிழ் இயக்குனர் ஒருவர் தன்னுடைய தகாத முறையில் நடந்துகொண்டதாக கூறியுள்ளார்.

"அந்த இயக்குனருக்கு தமிழ் மட்டுமே தெரியும். ஹிந்தி அல்லது ஆங்கிலம் புரியாது என்பதால் அவரது சார்பில் வேறு ஒருவர் பேசினார். 'மொழி பிரச்சனை இருக்கிறது. அதனால் உன்னை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறார். இது படம் முடியும் வரை தான். அதற்கு பிறகு நிறுத்திக்கொள்ளலாம்' என கேட்டுள்ளார்.

அதை கேட்டு அதிர்ச்சியான நடிகை, "நீங்கள் தவறான கதவை தட்டுகிறீர்கள். எனக்கு திறமை இருக்கிறது என நினைத்தால் மட்டுமே வாய்ப்பு கொடுங்கள் போதும்" என கூறி போனை கட் செய்துவிட்டாராம்.