Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சினிமாவில் நிலையான இடம் கிடைக்காததால் சீரியலில் களம் இறங்கும் பிரபல நடிகை?

சென்னையிலே பிறந்து வளர்ந்து எத்திராஜ் கல்லூரியில் விசுவல் கம்யூனிகேஷன் படித்துமுடித்து, முதன் முதலாக சித்து +2 படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சாந்தினி. அதன் பிறகு சில படங்களில் நடித்திருந்தாலும் அவர் மிகவும் பிரபலம் அடையும் அளவுக்கு படவாய்ப்புகள் அமையவில்லை என்றே சொல்லலாம்.

தற்போது சாந்தினி 10 படங்கள் கைவசம் இருந்தாலும் தனக்கு என்று நிலையான இடம் கிடைக்கவில்லை என்று இப்பொது சீரியலில் களம் இறங்கியுள்ளார்.

தற்போது பெரியத்திரை நடிகைகள் விட சின்னத்திரை நடிகைகள் ஒரு சீரியல் நடித்து மிகவும் பிரபலம் அடைந்து விடுகிறார்கள்.மேலும் அவங்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் எப்போதுமே இருக்கிறது.

புதிதாக விஜய் தொலைக்காட்சியில் தாழம்பூ என்று சீரியலில் சாந்தினி நடித்துவருகிறார்.

பெரியத்திரையில் இருந்து சின்னத்திரைக்கு இவ்வளவு சீக்கிரம் அடியெடுத்து வைத்திருப்பது பலரையும் திரும்பி பார்க்க செய்திருக்கிறது.