Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பல விஷயங்களை போட்டுடைத்த பிக்பாஸ் மீரா மிதுன்! படக்குழு எடுத்த அதிரடி முடிவு - அடுத்தடுத்து சர்ச்சை

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் மீரா மிதுன். உள்ளேயும் அவர் போலியான பிரச்சனைகளை உருவாக்கி சர்ச்சையில் சிக்கினார்.

பின் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஏற்கனவே அவர் மீது பண மோசடி புகாரும் எழுந்தது. இந்நிலையில் தற்போது புதிய சர்ச்சையை கிளிப்பியுள்ளார்.

இதில் அவர் தமிழ்நாட்டை படித்தவர்கள் தான் ஆட்சி செய்ய வேண்டும். ஜெயலலிதா இறந்த பிறகு சட்டம் ஒழுங்கு கீழ் நிலைக்கு சென்றுவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பில்லை. லஞ்சம், நீதியின்மை அதிகரித்துவிட்டது. காவல் துறை கயவர்களுக்கு நண்பர்களாக இருக்கிறார்கள்.என் குற்றச்சாட்டை காவல்துறை எடுத்துக்கொள்வதேயில்லை.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டேன். ஏன் பிரியங்கா சோப்ரா தமிழ் சினிமாவுக்கு திரும்பவில்லை என தெரிகிறது. ஆணாதிக்கம் சினிமாவில் இருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இயக்குனர் பாண்டிராஜும், சன் பிக்சர்ஸ் நிறுவனமும் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் என் காட்சிகளை நீக்குவதாக கூறினர். விஜய் டிவிக்கு போனதற்காக என கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயனும் விஜய் டிவியில் இருந்து தானே வந்தவர். சினிமாவில் ஆரோக்கியமான போட்டியில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.