Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ், அடுத்தப்படம் இவருடன் தான்!

கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கொடிக்கட்டி பறக்கின்றார். இதில் தெலுங்கில் இவர் நம்பர் 1 இடத்தில் இருக்கின்றார் என்றே சொல்லலாம்.

கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளிவந்த மகாநடி படத்திற்காக இவருக்கு தேசிய விருது கூட கிடைத்தது, அதை தொடர்ந்து இவர் மிஸ் இந்தியா என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

இதை தொடர்ந்து பிரபல நடிகர் நிதினுக்கு ஜோடியாக கீர்த்தி ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார், இப்படத்திற்கு ரங்தே என்று தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

கீர்த்தி தமிழ், தெலுங்கு மட்டுமின்றி மலையாளத்தில் மோகன்லாலுடனும் ஒரு பிரமாண்ட படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.