Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் முடித்த கையோடு அதிரடியை ஆரம்பித்த வனிதா விஜயகுமார்- புகைப்படத்துடன் புதிய தகவல்

பிக்பாஸ் 3வது சீசனில் யாராலும் மறக்க முடியாத ஒரு பிரபலம் வனிதா. நிகழ்ச்சிக்குள் சென்றதில் இருந்து ஒரே சண்டை தான்.

2வது முறை வீட்டிற்குள் சென்று போட்டியாளர்கள் இடையே நன்றாக பற்ற வைத்தார் என்றும் அவர் மீது ஒரு பேச்சு இருக்கிறது. சிலர் நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து வனிதாவை மிஸ் செய்கிறார்கள் என்றே கூறலாம்.

நிகழ்ச்சியை முடித்த போட்டியாளர்கள் கொண்டாட்டத்தில் இறங்க, வனிதா அடுத்த வேலையை ஆரம்பித்துவிட்டார்.

அதாவது அவர் அடுத்த பட படப்பிடிப்பை தொடங்கிவிட்டாராம், அதற்கான புகைப்படத்தை போட்டு விரைவில் ஒரு அப்டேட் என பதிவு செய்துள்ளார்.